பதுங்கு குழியில் குண்டுகளின் சில்லுகள் தெறித்து
முகமெங்கும் ரத்தம் - மழை
நீரோடு செங்குருதி நீர் கலக்க
வழிந்தோடும் வழிஎல்லாம் ரத்தம் - காதை
செவிடாகி கைஎரிகளை தூவி எம்
குழந்தைகளை முடமாக்கும் இயந்திர
பறவையின் இறகுகளில் ரத்தம் - என்
காயத்ரியின் மையிட்ட இருகண்களில் ஒரு
கண்ணில் துளையிட்டு நிற்கும் ரவையில் ரத்தம் - என்
மடியில் தலை வைத்து துவக்கியை துணை வைத்து
உறங்கிய சிறீதரனின் காதோரம் வழிந்த ரத்தம் இதை
காணுகின்ற ஆமிகாரர்களின் மனதில்
வழியும் சுகத்தின் அடிநாதம் எம் ரத்தம் - இதை
எண்ணி உள்ளம் எரிந்து இடக்கையை மடக்கி
மணிக்கட்டை முத்தமிட்டேன் - குண்டு வெடித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment