Wednesday, June 24, 2009

விதி

கரை தொட்ட அலையின்
ஈர மணலில் உன் பாதசுவடின்
மீது நடக்க பிடிக்கும் - குளிர்ந்த இரவில்
யாருமற்ற தனிமையில் உன்
கைகோர்த்து நடக்க பிடிக்கும் - உன்
மடி மீது குலுங்கி அழுது என்
துக்கம் பகிர பிடிக்கும் -
உன்முகம் பார்த்து கணக்கற்ற கதை
பேச பிடிக்கும் - உன்னோடு
நீ கொண்டு வரும் Pond's பவுடர்
வாசம் பிடிக்கும் - eyetex
கண்மையிட்டஉன் கண்கள் பிடிக்கும் - நீ சினுங்குவதற்கு
முன் சிணுங்கும் உன் ஜிமிக்கி தோடு
பிடிக்கும் - இரவை போல்நீண்ட
உன் கூந்தல் பிடிக்கும் - அதில்
நீசூடும் மல்லி பிடிக்கும் - மொத்தத்தில்
உன் எல்லாமும் எனக்கு பிடிக்கும் - எல்லையற்றவளே,
உன் எல்லாமும் பிடித்த என்னை
எனக்கும் உனக்கும் பிடிக்காமல்
போனதில் அதிக ஆச்சரியமில்லை தான் - ஆம்
எதிர் எதிர் துருவங்கள் தான்
ஈர்ப்பு கொள்ளுமாம் - இது தான் இயற்கையின் விதி.

No comments:

Post a Comment