Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Saturday, July 4, 2009

தொலைவு....

உனக்கும் எனக்குமான தொலைவுகள்

வளர்ந்து கொண்டே சென்றாலும் நினைவுகளால்

உன்னை துரத்தி நெருங்க முயற்சிக்கிறேன்....நினைவுகளுக்கு

காலமும் தூரமும் நேரமும் கிடையாதென்பது உண்மை.

Wednesday, June 24, 2009

விதி

கரை தொட்ட அலையின்
ஈர மணலில் உன் பாதசுவடின்
மீது நடக்க பிடிக்கும் - குளிர்ந்த இரவில்
யாருமற்ற தனிமையில் உன்
கைகோர்த்து நடக்க பிடிக்கும் - உன்
மடி மீது குலுங்கி அழுது என்
துக்கம் பகிர பிடிக்கும் -
உன்முகம் பார்த்து கணக்கற்ற கதை
பேச பிடிக்கும் - உன்னோடு
நீ கொண்டு வரும் Pond's பவுடர்
வாசம் பிடிக்கும் - eyetex
கண்மையிட்டஉன் கண்கள் பிடிக்கும் - நீ சினுங்குவதற்கு
முன் சிணுங்கும் உன் ஜிமிக்கி தோடு
பிடிக்கும் - இரவை போல்நீண்ட
உன் கூந்தல் பிடிக்கும் - அதில்
நீசூடும் மல்லி பிடிக்கும் - மொத்தத்தில்
உன் எல்லாமும் எனக்கு பிடிக்கும் - எல்லையற்றவளே,
உன் எல்லாமும் பிடித்த என்னை
எனக்கும் உனக்கும் பிடிக்காமல்
போனதில் அதிக ஆச்சரியமில்லை தான் - ஆம்
எதிர் எதிர் துருவங்கள் தான்
ஈர்ப்பு கொள்ளுமாம் - இது தான் இயற்கையின் விதி.

Monday, June 22, 2009

சுமை????

உன்னையோ உன் நினைவுகளையோ
என்றும் சுமையாக நினைத்ததில்லை- நீ
என்னை உதறிய பின்பும்.....

Sunday, June 21, 2009

தேவதைத்திருநாள்

என் தேவதைக்கு பிறந்தநாள் - இனிப்பு,
பூக்கள்,பரிசுகள் - இவை அனைத்தும்
எல்லாரும் உனக்கு கொடுக்க கூடும்
ஆனால் யாரும் தராத ஒன்றை உனக்கு
நான் பரிசாக தருகிறேன் - என் மனது.
ஆமாம், உன்னையே உனக்கு பரிசாக
தர என்னால் மட்டும் தானே முடியும்.
எனென்றால் என் மனது முழுக்க நீயல்லவா
இருக்கிறாய் - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
குறிப்பு :
உனக்கு இன்று மட்டும் தான் திருநாள் - எனக்கு
உன்னை காணுகின்ற எல்லா நாளும் திருநாளே....

Monday, June 8, 2009

மீண்டும் புத்தன்

சாளரத்தின் ஊடே சட்டென வழியும்

மழைதண்ணீர் போல் , எல்லா நினைவுகளும்

வடிந்து முடிந்துவிட்ட நிலையில் புத்தனாக

அலுவலகம் செல்கிறேன் -அவள் இறங்கும் நிறுத்தத்தில்

நின்று புகைக்கிறேன் -இன்றாவது வருவாளா ,சிரிப்பாளா ?

புத்தன் மனிதன் ஆனான் .

என்னை கடக்கையில் நின்றால் ,சிரித்தால் ,நடந்தால் -இது

அது தான் என குதித்தது குரங்கு மனது .

காலில் மெட்டி ,நடு வகிட்டில் பொட்டு ,புது தாலி .

விடுப்பின் காரணம் புரிந்ததில் புகை அணைத்து

அலுவலகம் செல்கிறேன் -மீண்டும் புத்தனாக .

ஆம் ,புத்தனும் மணம் செய்து தானே ஆசை துறந்தான் .

Monday, June 1, 2009

ஆசிர்வாத இம்சைகள்

வைரமுத்து இந்த மாதிரி நிறைய எழுதிட்டார் (பெய்யென பெய்யும் மழை ....)....அவர் எழுதாம விட்டதா நான் கொஞ்சம் ட்ரை பண்ணி பார்த்தேன் .....நல்லா இருந்தா கமெண்ட்ஸ் எழுதுங்கபா....... ப்ளீஸ்...

மார்கழி பனி ,
ஓலை குடிசை ,
தாழிட்ட கதவு ,
ஒற்றை படுக்கை ,
போர்வையாய் நீ ..
இது போதுமடி எனக்கு ......

இரவு பேருந்து ,
மெலிதான மழை ,
கண்ணாடி ஜன்னல் ,
கதகதப்பாய் நீ ,
கையணைப்பில் நான் ,
இது போதுமடி எனக்கு …….

பட்டாசு பண்டிகை ,
தலையில் மல்லிகை பூ ,
ரத்த நிற பட்டுபுடவையில் சிரிகிறாய் நீ ,
கிறக்கத்தில் நான் ,
இது போதுமடி எனக்கு ….

அலட்சிய செய்கை ,
ஆளை விழுங்கும் பார்வை ,
பேசத்துடிக்கும் உதடு ,
பார்த்து தவிர்க்கும் பார்வை
துடிக்கின்ற கண்கள் ,
தூரத்து நீ ,
அவஸ்தையில் நான் ,
ஒற்றை பார்வை போதுமடி எனக்கு ….

நெஜமா தான் சொல்றியா?????

Wednesday, May 13, 2009

மறுபிறவி

அறைஞ்ச கன்னம் வலிக்கயில
உடைஞ்ச பல்லு ரத்தம் கொட்டயில கைய்ய மடிச்சு உடைக்கயில
கதறி அழுத நான்
உன்பேர் சொன்னதும் அழுகைய நிறுத்தி
அடி வாங்குறேன் – ஏற்கெனவே உன்னால
செத்த எனக்கு ,உன்பேர் சொன்னதும்
எல்லா உணர்ச்சியும் மரத்து போச்சுதே . இப்படியே செத்து போனாலும் சத்தியம்
மறுபிறவி எடுத்து வருவேன் சண்டாளி
உன்னை சாகடிக்க …..