Friday, July 17, 2009

தொலைத்த புன்னகை...

கை நீட்டி முறுவளித்தது குழந்தை.
முகம் திருப்பிக்கொண்டேன் -
தாயின் அழுக்கு முகம் கண்டு....

Saturday, July 4, 2009

தொலைவு....

உனக்கும் எனக்குமான தொலைவுகள்

வளர்ந்து கொண்டே சென்றாலும் நினைவுகளால்

உன்னை துரத்தி நெருங்க முயற்சிக்கிறேன்....நினைவுகளுக்கு

காலமும் தூரமும் நேரமும் கிடையாதென்பது உண்மை.

Friday, July 3, 2009

துவக்கமில்லா முடிவுகள் (சில)

ரயிலில் வரும் குழந்தையிடம் கிடைக்கும் நட்பு,

பேருந்தின் ஜன்னலோர இருக்கை பெண்ணின் குறுநகை,

காதலியிடமிருந்து கிடைக்கும் அவசர முதல் முத்தம்,

தலைக்குச்சூடாமல் வாடி விடும் மல்லிச்சரம்,

தூரத்தில் காதலியை கண்டதும் அணைந்துவிடும் சிகரெட்,

வாங்கிவிட எண்ணும் Toyota Camry,

எனக்கு முன் நிற்பவனுடன் தீர்ந்துவிடும் சினிமா டிக்கெட்,

கருவிலேயே கலைந்துவிடும் சிசுக்கள்,

கடவுள் தோன்றியவுடன் மறைந்து விடும் கனவு,

கோடைக்கால குளிர் மழை,

கரை புரளும் காவிரியின் அரசமரத்தடி

இவற்றுடன்

உன்னிடத்தில் சொல்லாமலே கருகிப்போன என் காதலும் கூட....

Thursday, July 2, 2009

நியாயங்கள்

உன் எல்லா வெற்றிகளும் நியாயப்படுத்தப்படும் - ஆனால்
உன் எந்த தோல்வியும் அல்ல.

Monday, June 29, 2009

தேடல்....

சொந்தங்களின் நசநசப்பில் இருந்து விடை பெற்று
முதலிரவு அறைக்குள் நீ நுழைந்து
என் கண் நோக்கி ஏதோ தேடினாய் - என்னவென்று கேட்டதில்
ஒண்ணுமில்லை என்று சினுங்கிகொண்டாய்.....

எல்லாம் முடிந்து விலகி படுத்து தேடியது
என்னவாக இருக்கும் என்று நான் யோசிக்கையில்
"உண்மை" என்று பதிலளித்தது உள்மனது.....
உண்மையாகவே அதைத்தான் தேடினாளா/தேடினானா?....

எல்லா இரவுகளிலும் சில உண்மைகளின்
தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
விடைகள் தான் கிடைப்பதில்லை.....

Wednesday, June 24, 2009

விதி

கரை தொட்ட அலையின்
ஈர மணலில் உன் பாதசுவடின்
மீது நடக்க பிடிக்கும் - குளிர்ந்த இரவில்
யாருமற்ற தனிமையில் உன்
கைகோர்த்து நடக்க பிடிக்கும் - உன்
மடி மீது குலுங்கி அழுது என்
துக்கம் பகிர பிடிக்கும் -
உன்முகம் பார்த்து கணக்கற்ற கதை
பேச பிடிக்கும் - உன்னோடு
நீ கொண்டு வரும் Pond's பவுடர்
வாசம் பிடிக்கும் - eyetex
கண்மையிட்டஉன் கண்கள் பிடிக்கும் - நீ சினுங்குவதற்கு
முன் சிணுங்கும் உன் ஜிமிக்கி தோடு
பிடிக்கும் - இரவை போல்நீண்ட
உன் கூந்தல் பிடிக்கும் - அதில்
நீசூடும் மல்லி பிடிக்கும் - மொத்தத்தில்
உன் எல்லாமும் எனக்கு பிடிக்கும் - எல்லையற்றவளே,
உன் எல்லாமும் பிடித்த என்னை
எனக்கும் உனக்கும் பிடிக்காமல்
போனதில் அதிக ஆச்சரியமில்லை தான் - ஆம்
எதிர் எதிர் துருவங்கள் தான்
ஈர்ப்பு கொள்ளுமாம் - இது தான் இயற்கையின் விதி.

Monday, June 22, 2009

சுமை????

உன்னையோ உன் நினைவுகளையோ
என்றும் சுமையாக நினைத்ததில்லை- நீ
என்னை உதறிய பின்பும்.....

Sunday, June 21, 2009

தேவதைத்திருநாள்

என் தேவதைக்கு பிறந்தநாள் - இனிப்பு,
பூக்கள்,பரிசுகள் - இவை அனைத்தும்
எல்லாரும் உனக்கு கொடுக்க கூடும்
ஆனால் யாரும் தராத ஒன்றை உனக்கு
நான் பரிசாக தருகிறேன் - என் மனது.
ஆமாம், உன்னையே உனக்கு பரிசாக
தர என்னால் மட்டும் தானே முடியும்.
எனென்றால் என் மனது முழுக்க நீயல்லவா
இருக்கிறாய் - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
குறிப்பு :
உனக்கு இன்று மட்டும் தான் திருநாள் - எனக்கு
உன்னை காணுகின்ற எல்லா நாளும் திருநாளே....

Wednesday, June 10, 2009

நண்பம்

நல்ல நண்பம் கூடி பிரிவதில் புரியும் -
இதயத்தின் ஒரு பகுதி கிழிந்து தொங்கும்
தொண்டைக்குழி அடைத்து நிற்கும் - கனவுக்கன்நீர்
கண்களில் திரையிடும் -உறக்கம்
வர மறுக்கும் - இது
போல் நல்ல நண்பம் இல்லை என கொள்ளும் .

பிரிதல் - காலத்தின் அவசியம்
புரிதல் - நட்பின் அவசியம்
உனக்கும் எனக்குமான புரிதல்
அவசியங்களை கடந்ததாக இருக்கட்டும் ...

கண்ட நாள் முதலாய் புன்னகை பூக்களை வீசியவளே
இனி அந்த பூங்கொத்துக்கள் எங்கிருந்து கிடைக்கும் ?
இது வரை நீ வீசிய பூக்கள் என் இதய
பெட்டகத்தில் பத்திரப்படுத்த பட்டுரிக்கின்றன ....
அவை யாருக்கும் விற்ப்பனைக்கு அல்ல ..

உன்னால் ஆயிரம் தழும்புகளை நான் பெற்றாலும்
என்னால் உனக்கு ஒரு தழும்பு இருக்கலாகாது - இருந்தால்
மருந்திட காத்திருக்கிறேன் தோழி ....

எல்லா நிலையிலும் துன்பம் தருவது காதல்
எல்லா துன்பதிளிம் துயர் துடைப்பது நட்பு ...
காதலை ஏற்க்க மறுத்தாலும் -
நட்பு சிலுவை சுமக்க விடு என்னை .....

வாழ்வில் உன் எல்லா இலக்குகளும் சுலபமாகட்டும்
உலகம் சுருங்கட்டும் - உன் வாழ்வில் எல்லா
நாளும் கார்த்திகை ஆகட்டும் .
உன் வெற்றி கைக்கு எட்டும் தூரத்தில் .....சாதித்து விடு சீக்கிரம் ...

உனக்கும் எனக்குமான புரிதலுடன் .....

Monday, June 8, 2009

மீண்டும் புத்தன்

சாளரத்தின் ஊடே சட்டென வழியும்

மழைதண்ணீர் போல் , எல்லா நினைவுகளும்

வடிந்து முடிந்துவிட்ட நிலையில் புத்தனாக

அலுவலகம் செல்கிறேன் -அவள் இறங்கும் நிறுத்தத்தில்

நின்று புகைக்கிறேன் -இன்றாவது வருவாளா ,சிரிப்பாளா ?

புத்தன் மனிதன் ஆனான் .

என்னை கடக்கையில் நின்றால் ,சிரித்தால் ,நடந்தால் -இது

அது தான் என குதித்தது குரங்கு மனது .

காலில் மெட்டி ,நடு வகிட்டில் பொட்டு ,புது தாலி .

விடுப்பின் காரணம் புரிந்ததில் புகை அணைத்து

அலுவலகம் செல்கிறேன் -மீண்டும் புத்தனாக .

ஆம் ,புத்தனும் மணம் செய்து தானே ஆசை துறந்தான் .

விதை நெல்

பால்யத்தின் நட்பையும் நினைவுகளையும் தொலைத்து விட்டு செல்லரித்த புகைப்படத்தில் முகம் மறைந்து போயிருக்கும் என்னுயிர் நண்பனின் முகம் தேடி கொண்டிருந்தேன் . சிணுங்கிய கைபேசியில் புது எண் -அவனாக இருக்குமோ ? யோசிக்கிறது பேதலித்த மனது –தொலைந்து போன விதை நெல்லை மறந்து …..

மரண முத்தம்

பதுங்கு குழியில் குண்டுகளின் சில்லுகள் தெறித்து
முகமெங்கும் ரத்தம் - மழை
நீரோடு செங்குருதி நீர் கலக்க
வழிந்தோடும் வழிஎல்லாம் ரத்தம் - காதை
செவிடாகி கைஎரிகளை தூவி எம்
குழந்தைகளை முடமாக்கும் இயந்திர
பறவையின் இறகுகளில் ரத்தம் - என்
காயத்ரியின் மையிட்ட இருகண்களில் ஒரு
கண்ணில் துளையிட்டு நிற்கும் ரவையில் ரத்தம் - என்
மடியில் தலை வைத்து துவக்கியை துணை வைத்து
உறங்கிய சிறீதரனின் காதோரம் வழிந்த ரத்தம் இதை
காணுகின்ற ஆமிகாரர்களின் மனதில்
வழியும் சுகத்தின் அடிநாதம் எம் ரத்தம் - இதை
எண்ணி உள்ளம் எரிந்து இடக்கையை மடக்கி
மணிக்கட்டை முத்தமிட்டேன் - குண்டு வெடித்தது.

கல்லறைக்காவலன் .

மரணித்த என் பிள்ளைகள்
பிறந்தளுத்த ஆத்மாக்கள் -
தொட முடியா உளுத்தர்கள்
தாங்க முடியா மனிதத்தின் இம்சையில்
விடுதலை பெற்று கொண்டவர்கள்

மௌனித்த இம்சையில் மௌன பாஷை
கூறி விடுப்பு எடுத்தவர்கள் - விழித்தவுடன் அழும்
குழந்தைகளை போல் மரணித்ததும் சிரித்தவர்கள் -
துறவறம் பூண்ட புத்தனின் மனைவி போல் சகலமும் துறந்தவர்கள்.

சஞ்சரித்த சந்தோஷித்த உலகத்திற்கு விடை கொடுத்தவர்கள்
மீளா உறக்கம் உறங்க என்னிடம் இடம் கேட்க்கும்
முடிவிளிகளின் கடைசி உறவினன் ,
கல்லறைக்காவலன் .

Monday, June 1, 2009

ஆசிர்வாத இம்சைகள்

வைரமுத்து இந்த மாதிரி நிறைய எழுதிட்டார் (பெய்யென பெய்யும் மழை ....)....அவர் எழுதாம விட்டதா நான் கொஞ்சம் ட்ரை பண்ணி பார்த்தேன் .....நல்லா இருந்தா கமெண்ட்ஸ் எழுதுங்கபா....... ப்ளீஸ்...

மார்கழி பனி ,
ஓலை குடிசை ,
தாழிட்ட கதவு ,
ஒற்றை படுக்கை ,
போர்வையாய் நீ ..
இது போதுமடி எனக்கு ......

இரவு பேருந்து ,
மெலிதான மழை ,
கண்ணாடி ஜன்னல் ,
கதகதப்பாய் நீ ,
கையணைப்பில் நான் ,
இது போதுமடி எனக்கு …….

பட்டாசு பண்டிகை ,
தலையில் மல்லிகை பூ ,
ரத்த நிற பட்டுபுடவையில் சிரிகிறாய் நீ ,
கிறக்கத்தில் நான் ,
இது போதுமடி எனக்கு ….

அலட்சிய செய்கை ,
ஆளை விழுங்கும் பார்வை ,
பேசத்துடிக்கும் உதடு ,
பார்த்து தவிர்க்கும் பார்வை
துடிக்கின்ற கண்கள் ,
தூரத்து நீ ,
அவஸ்தையில் நான் ,
ஒற்றை பார்வை போதுமடி எனக்கு ….

நெஜமா தான் சொல்றியா?????

Wednesday, May 13, 2009

மறுபிறவி

அறைஞ்ச கன்னம் வலிக்கயில
உடைஞ்ச பல்லு ரத்தம் கொட்டயில கைய்ய மடிச்சு உடைக்கயில
கதறி அழுத நான்
உன்பேர் சொன்னதும் அழுகைய நிறுத்தி
அடி வாங்குறேன் – ஏற்கெனவே உன்னால
செத்த எனக்கு ,உன்பேர் சொன்னதும்
எல்லா உணர்ச்சியும் மரத்து போச்சுதே . இப்படியே செத்து போனாலும் சத்தியம்
மறுபிறவி எடுத்து வருவேன் சண்டாளி
உன்னை சாகடிக்க …..